4 Mar 2019

மழைக் கவிதை



மழையைக் கேட்டாள் மகள்
மேகத்தைப் பார்த்த போது
பஞ்சு மிட்டாய்க் கேட்டாள் மகள்
அதுவே ஐஸ் கட்டிகளைப் பொழிந்த போது
ஐஸ் கிரீம் கேட்டாள்
நீராகிப் பொழிந்த போது
தண்ணீர் பாக்கெட் கேட்டாள்
வெள்ளமென ஓடிய போது
காகிதத்தில் கப்பல் ஒன்றும்
தப்பித்துச் செல்ல படகு ஒன்றும் கேட்டாள்
நிவாரண முகாமில் அடைபட்டிருந்த போது
‍சோற்றோடு கொஞ்சம்
செல்ல முத்தம் கேட்டாள் மகள்
ஆம் மீண்டும் மழையைக் கேட்டாள் மகள்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...