நகரச் சாத்தியம்
வாகன
நெரிசலில் விழுந்து கிடப்பவர்
குண்டு
கட்டாக கட்டி வீசப்பட்டவர்
மாதாந்திரத்
தவணைகள் வாயைக் கட்டி விட்டன
மளிகைக்
கடன்கள் கைகளைக் கட்டி விட்டன
கல்விக்
கட்டணங்கள் கால்களைக் கட்டி விட்டன
அக்கெளண்டில்
குடித்துக் கொண்டிருக்கும்
சிற்றுண்டியும்
தேநீரும்
உப்பிட்ட
உடலை உப்பின்றி உறிஞ்சி விட்டன
சில்லரைக்
கடன்களில் கட்டப்பட்டிருக்கும்
சுயமரியாதையை
அவ்வபோது
அவிழ்த்துப்
பார்ப்பவர் ஆச்சர்யப்பட்டுப் போகிறார்
இவ்வளவு
கட்டுகளுடன்
நகர்தலின்
சாத்தியமற்ற நகர்தலின் நகரச் சாத்தியத்தை
*****
No comments:
Post a Comment