24 Mar 2019

தீ தின்ற மிச்சம்


தீ தின்ற மிச்சம்
ஒரு பொறி பற்றி விட்டால்
காடு காலியாகி விடும் என்பது
பிரதானமாக நிற்கும் மரத்துக்குத் தெரியும்
முதலில் நிற்கும் மரங்கள் எல்லாம்
பொறியை அணைப்பதில் கவனமாக இருக்கும்
வட்டார மாவட்ட மற்றும் வார்டு மரங்கள்
வேறு காட்டுக்குச் சென்று விடும்
தீ தின்ற மிச்சத்தை
சாம்பலின் நாக்குகள் நீட்டும்
எடுத்து திருநீறாக இட்டுக் கொள்ளலாம்
அஸ்தியாய்க் கரைக்கலாம்
செத்த பின் புதைப்பதும் எரிப்பதும்
வரலாற்றுக்கு இரண்டும் ஒன்றுதான்
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...