3 Mar 2019

சொல்புதிது கவிதைகள்


மழைப் பிரசங்கம்
அவ்சாரி என்று அவசரப்படாதீர்கள்
விபச்சாரி என்று விபத்துக்குள்ளாக்காதீர்கள்
அவ்சாரி ஆக்கிய ஆண்மகனுக்கான
வார்த்தைகள் கூட இல்லாதவர்கள் நீங்கள்
விபச்சாரியிடம் வந்து சென்றவனுக்கான
சொல்லைக் கூட உருவாக்காதவர்கள் நீங்கள்
விழுந்த இடம் தவறானால்
மழைத்துளி என்ன செய்யும்
சுத்தமாக்கும் நீரை
சுத்தப்படுத்துகிறேன் என்று சொல்லி
அசுத்தமாக்குபவர்கள்
மக்குத்தனத்தை உடைப்பில் போட்டு
மடத்தனத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
அசுத்தமாக்குபவர்கள் அகன்று போனால்
சுத்தமாக்குபவர்கள் தேவையில்லை
எல்லா நீர்த்துளியும் மேகமாகும் போது
சாக்கடையில் விழுந்த துளியும் தூய்மையாகும்
எல்லா மனிதர்களும் நல்லவரானால்
யாரும் கெட்டவராக ஆவதில்லை
*****

No comments:

Post a Comment

ஓய்வின் பெரும்பொழுது

ஓய்வின் பெரும்பொழுது கணவர் இறந்து விட்டார் மகன் வெளிநாடு போய் விட்டான் மகள் கட்டிக் கொண்டு போய் விட்டாள் யாருமில்லாத வீட்டில் தொலை...