புதிர் விளையாட்டு (எ) விளையாட்டுப்
புதிர்
ஒரு
மிருகத்தையும் ஒரு மனிதனையும்
ஒரு
தேவனையும் ஒரு சாத்தானையும்
ஒன்றாகக்
கட்டி
எங்கு
வளர்த்து வருகிறாய் என்கிறாய்
உனக்குத்
தெரியாமல் வெறு எங்கு
வளர்த்து
விடப் போகிறேன்
இந்த
மனதைத் தவிர
மிருகம்
கண்ட போது மிருகமாவதும்
மனிதம்
கண்ட போது மனிதன் ஆவதும்
தெய்வம்
கண்ட போது தேவன் ஆவதும்
குரோதம்
கண்ட போது சாத்தான் ஆவதும்
உனக்குப்
புதிர்
மனதுக்கு
விளையாட்டு
விளையாடி
விளையாடி கழிகிறது வாழ்க்கை
தெய்வம்
கண்ட போது கல் எறிகிறாய்
சாத்தான்
கண்ட போது கும்பிடுகிறாய்
உனக்கென்ன
பயத்துக்கு மரியாதை
சாத்வீகத்துக்கு
நரகல்
சாத்தானை
ஓதி
தெய்வத்தை
முணுமுணுக்கும் உதடுகள் உனக்கு
உலகெங்கும்
மந்திர ஜெபங்கள் கேட்கும் போதில்
அணுகுண்டுகள்
உருளும் ஓசை
உனக்கும்
மட்டுமன்று எனக்கும் கேட்கிறது
*****
No comments:
Post a Comment