2 Mar 2019

ஒரு பொக்கைக் கவிதை


ஒரு பல் விழுந்தால் எவ்வளவு குறையும் மண்டை கனம்?
உதிர்ந்து விட்ட இதழ்கள்
வாடாத காம்பு
இன்னொரு மொட்டு
கேலிச் சிரிப்போடு
இதழ் விரிக்கும் தானும் ஒரு மலராக
இன்னும் சற்று நேரத்தில்
இதழ்கள் உதிரத் தொடங்கும்
உதிராத காம்பின்
பொக்கைவாய்ச் சிரிப்பின்
பற்கள் என்னிடம் கொஞ்சம்
உங்களிடம் கொஞ்சம் இருக்கட்டும்
விழுந்து விட்டப் பற்களால்
தலைக்கனம் சற்று குறைந்திருக்கும்
சூடிய மலரின் உதிர்ந்து விட்ட இதழ்களால்
இன்னும் சற்றே குறைந்திருக்கும்
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...