15 Mar 2019

காலச் சூத்திரம்


காலச் சூத்திரம்
சூத்திரம் ஒன்று இருக்கிறதோ
எதிர்காலத்தில் பிடிபடும் அதை
நிகழ்காலத்தில் ஒப்படைப்பது எப்படி
கடந்தக் காலச் சூத்திரங்கள்
நிகழ்காலத்தின் காயலான் கடைகளில்
நிகழ்காலத்தை எதிர்காலம் நோக்கி நகர்த்துவதோ
எதிர்காலத்தை நிகழ்காலம் ஆக்குவதோ
கால மாற்றம் இன்றி
காலத்தை ஒன்றாக்கி நிறுத்துவதோ
சூத்திரம் ஒன்றுதான்
இந்த நொடியில் நில்
சூத்திரம் தேடி அலைபவன் நீதான்
நகரும் நீதான் நிற்க வேண்டும்
முன் பின் நகர்வது காலமன்று நீதான்
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...