14 Mar 2019

போன உயிர் திரும்பும் வரை பொறுத்துக் கொள்


போன உயிர் திரும்பும் வரை பொறுத்துக் கொள்
தாகமென்றால் கண்ணீரைக் குடித்துக் கொள்
சிறுநீர் என்றாலும் பாதகமில்லை
இல்லாத பர்க்கரையும் பீட்சாவையும்
இறக்குமதிச் செய்யலாம்
இருக்கின்ற தண்ணீரை
வெளிநாட்டுக்கு ஏற்றுமதிச் செய்யலாம்
உள்நாட்டுக்கு என்றால்
வழக்குகள் பண்ணலாம்
இல்லம் ஒன்று இங்கிருக்க
ஆயி அப்பன் முதியோர் இல்லத்தில் இருக்க
தவிப்பவர்கள் இங்கிருக்க
அணைகள் ஆயிரம் அங்கங்கு இருக்க
சோகத்தின் களைப்பு தெரியாது இருக்க
புரட்சி கீதம் பாடாதே
பசித் தீயின் சூடு அறியாது இருக்க
அலறித் தொலைக்காதே
கண்ணீர் வற்றிப் போனால்
கண்களை குறை சொல்
சிறுநீர் வராது போனால்
சிறுநீரகங்களைக் குறை சொல்
வாரியங்கள் அமைக்கும் வரை பொறுத்துக் கொள்
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...