12 Mar 2019

பெண் பார்த்தல்


பெண் பார்த்தல்
சிறு பெண் குழந்தை முதல் கிழவி வரை
வந்து கொண்டு இருக்கிறார்கள்
நூடுல்ஸ்க்கு வரும் குழந்தைப் பெண்
காபிக்கு வரும் கிழவி
ஆண்களின் முகச்சவரப் பசைக்கு வரும் பருவப் பெண்
நட்ட நடுநிசியில் ஆண்மைக் குறைவுக்கு
நிகழ்ச்சித் தொகுப்பாளாராக வரும் இளம் பெண்
கருப்பை இழிவுபடுத்தி
சிவப்பழகு பசையைத் தடவச் சொல்லும்
வெள்ளை நிறத்து ஒரு பெண்
அண்மைச் செய்திகளை
அதற்கான முன்தயாரிப்புகளோடு வாசிக்கும் பெண்
அச்செய்தியின் ஊடே
பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட மற்றும்
விளம்பர இடைவேளைக்கு இடையில்
உட்படப் போகும் பெண்
கழுத்தறுப்பட்டு சங்கிலிக்காக
ரத்தம் சொட்டச் சொட்ட
சாலையில் தரதரவென்று
இழுத்துச் செல்லப்பட்டப் பெண்
பெண்கள் பெண்கள் பெண்கள்
வந்து கொண்டே இருக்கிறார்கள்
வந்து கொண்டே இருப்பார்கள்
கடை மூடி வியாபாரம் முடியும் வரை
பெண்கள் கூடி பார்த்துக் கொண்டும் இருப்பார்கள்
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...