11 Mar 2019

பாம்பின் பயணங்கள்


பாம்பின் பயணங்கள்
நள்ளிரவில் நடுச்சாலையில் நகரும்
பாம்பின் புத்திசாலித்தனம்
அதே நள்ளிரவில் நடுச்சாலையில் விரையும்
வாகனத்துக்குத் தெரியாமல் இருக்கலாம்
சக்கைச் சக்கையானப் பாம்பின் துண்டங்கள்
சிதறிக் கிடக்கின்றன
விபத்தின் பிரக்ஞையின்றி வாகனங்கள்
ஓர் ஓலைப் பாம்பை அடித்தால்
ஒன்பது ஓலைப் பாம்புகள் வருவது போல்
அடுத்தடுத்து விரைகின்றன
நடுச்சாலையில் செத்த பாம்பு அதன் பின்
கருவாடாய்க் காற்றில் பறந்து
சமாதிக்கான இடம் தேடி
டயரில் சிக்கிச் சுழல ஆரம்பிக்கிறது
விஷம் கொண்ட பாம்புகள்
இனி வாகனத்தில் அடிபடாமல் இருக்க
இம்முறை வாகனத்தில் பயணிக்கத் தொடங்கின
*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...