27 Mar 2019

A Lateral Fish Poem


ஒற்றை மீனுக்கானத் துக்கம்
கண்ணாடிப் பெட்டியிலிருந்து
குளியல் தொட்டியில் குதித்த
மீனொன்று
மதுக்குவளையில் தவறி விழுந்து
மாண்டு போனது
கச்சிதமாய்ச் செதுக்கப்பட்டச் செதில்கள்
கவனமாக நறுக்கப்பட்ட வால்கள்
மேக்கப் பெட்டியின் முக்கால்வாசி
பூசியிருந்த முகம்
சுனாமியாய் வீசி ஆர்ப்பரித்து எழுந்தன
ஆயிரம் கடல்கள் கொண்ட ஊடக அலைகள்
கோடி கோடியாய் மீன்கள் இருக்கட்டுமே
ஒன்றை இழந்து விட்ட துக்கமின்றி
அலைகளை வீசிக் கொண்டிருந்தது கடல்
அழகான ஆட்டம் காட்டும்
பாம்பின் விஷம் செரிக்கும் மயில்கள்
மெல்லக் கொல்லும் விஷத்துக்கு மாள்வது போல்
ஒற்றை மீனுக்கானத் துக்கம்
தூண்டிலில் சிக்கிய மீன்களின் கணக்கறுத்துப் போனது
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...