9 Feb 2019

கருப்பு இருந்தால் தாருங்கள்


கருப்பு இருந்தால் தாருங்கள்
நடுநிசி நேரத்தல் கருப்பைத் தேடி அலையும்
ராப்பிச்சைக்காரனாகி விட்ட எனக்கு
உங்களிடம் கருப்பு கொஞ்சம் இருந்தால்
யாசகம் இடுங்கள்
இரவைக் கிழித்தெறிந்து சில்லரைகளாக
வீசி எறிந்தாலும் தெண்டனிடுகிறேன்
உங்கள் முன்னால்
வாகன வெளிச்சத்தை வீசி
உங்கள் காம்பெளண்ட் சுவர்களைக் கூட
அண்ட விடாமல் வெளிச்ச நாய்களை விட்டு
என்னைத் துரத்தாதீர்கள்
கோப அக்கினி கூர்க்காக்களை அனுப்பி
வெளிச்சக் கம்புகளால் வெளுக்காதீர்கள்
உங்கள் கேளிக்கை விருந்துகளின்
பல வண்ண விளக்குகளை அணைத்து
கருப்பு இருந்தால் தாருங்கள்
வெளிச்ச வெள்ளையின் ரூபமான
தூக்க மாத்திரையை நீங்களே வைத்துக் கொண்டு
கொஞ்சமேனும் கருப்பு இருந்தால் தாருங்கள்
உறங்க உறக்கம் வேண்டும் எனக்கு
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...