தாகம் தணியா கடல்
கடலின்
தாகத்தைத் தணிக்காத
நதியை
சவுக்கால் அடியுங்கள்
மேகத்தைப்
புறணியில் தட்டுங்கள்
நீங்களோ
நதியைச் சாக்கடையாக்கியவர்கள்
மேகத்தைக்
கரும்புகையாக்கியவர்கள் என்று
நதியோ
மேகமோ திருப்பித் தாக்கினால்
நகர்ந்து
அப்புறம் ஓடி விடுங்கள்
உங்கள்
தாகம் தீர்க்க வைத்துள்ள
புட்டியிலிருந்து
சிறிது நீரை அள்ளி
நதியில்
நலுங்காமல் ஊற்றுங்கள்
ஒரு
சிறு கிண்ணத்தில் நீரூற்றி
மேகத்துக்குப்
படையல் போடுங்கள்
கடலின்
தாகம் தணிவதாக கருதிக் கொண்டு
பித்ரு
பூசையை முடித்துக் கொள்ளுங்கள்
தாகத்தால்
செத்தவர்களின் சாம்பலைக் கரைத்து
இனிமேலும்
மிகச் செய்யாதிருங்கள்
தணிக்க
முடியாத கடலின்
பொங்கி
எழும் அலைகளின் தாகத்தை
*****
No comments:
Post a Comment