4 Feb 2019

கனவு தேசத்துக்காரர்கள்

கனவு தேசத்துக்காரர்கள்
குழந்தையின் கனவில் புகுந்து
கிலுகிலுப்பையைத் திருடிக் கொண்ட போது
நள்ளிரவு விழித்துக் கொண்டு அழுதது
பகல் பொழுதொன்றில் அதன்
பாலைப் பிடுங்கிக் குடித்த போது
வானம் ஓயாது வெயிலையும் மழையையும்
மாற்றி மாற்றிப் பொழிந்தது
கொஞ்சம் அதன் மழலை மொழிகளுக்கு
காதடைத்துக் கொண்ட போது
பூமியின் பேரிரைச்சல் அதிகமானது
கன்னத்தில் சற்று அழுத்திக் கிள்ளினால்
நடுக்கடல் நடுங்கி கொந்தளிக்கிறது
நடைபயின்று தடுமாறி விழும் போது
ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதாக
குதூகலித்துச் சிரிக்கிறது கட்டாந்தரை
அது கூட பரவாயில்லை என்றால்
அழும் குழந்தையைப் பார்க்கச் சகிக்காமல்
நிலத்தைக் கிள்ளி விட்டு மலர் மேல் அமர்ந்து
தொட்டில் குழந்தை போல்
பெப்பெப்பே காட்டுகிறது
சிறகைச் சிமிட்டும் வண்ணத்துப் பூச்சி
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...