23 Feb 2019

அரசியல் அரிச்சுவடி கவிதைகள்


அகராதியில் ஒரு புதியச் சொல்
இருப்பதைச் சமமாகப்
பங்கிட்டுக் கொள்ளத் தெரியாத
சமூகம் அடித்துக் கொள்ளும்
சமாதானமாக சாதியை உருவாக்கிக் கொள்ளும்
எதிரியைச் சமாளிக்க மதத்தை
கையில் ஆயுதமாக ஏந்திக் கொள்ளும்
உள்நாட்டுக் கலவரமென்றால்
தேசப்பற்றை எடுத்து பற்று போடும்
மண்டையில் அடித்த பின்னும்
குருதி நிற்கவில்லை என்றால்
தேசத் துரோகி எனத்  தூக்கில் போடும்
இப்போது நிலைமை மாறி விட்டது
சாதி, மதம், தேசம் என பல சொற்களைப்
பயன்படுத்தி அலுத்துப் போய்
அரசியல் என்ற ஒற்றைச் சொல்
புழக்கத்துக்கு வந்து விட்டது
அடித்துக் கொல்வார்கள் தொண்டர்கள்
அடித்துக் கொல்ல வைப்பார்கள் தலைவர்கள்
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...