7 Feb 2019

பதாகையில் வாழ்பவைகள்


பதாகையில் வாழ்பவைகள்
உங்களுக்குப் பிடித்தக் குப்பைத் தொட்டியில்
நேர்மையைப் போடுங்கள்
துருத்திக் கொண்டு இருந்தால்
உண்மையையும் போடுங்கள்
அவசியமில்லையென்றால் அன்பையும்
போட்டு விடுங்கள்
மக்கும் குப்பைகளை எதிர் வீட்டில்
யாரும் இல்லாத சமயம் பார்த்து வீசுங்கள்
மக்காத குப்பைகளை வடிகால்களின் திறப்புகளில்
கொட்டி விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி வாருங்கள்
குப்பை அள்ளுபவர்கள் கடக்கையில்
வீடுகளில் நிரம்பியிருக்கும் பொய்மையையும் சுயநலத்தையும்
தாங்க முடியாமல் துர்நாற்றத்தின் வீச்சத்தில்
மூக்கைப் பிடித்துக் கொள்ளட்டும்
குப்பை லாரிகள் தெருவைக் கடக்க முடியாமல்
ராட்சச துர்நெடியில் மயங்கி விழட்டும்
தூய்மைக்கான நம் பிரச்சாரத்தை
பதாகையாக்குவோம்
நாள் முழுவதும் பேசித் தீர்ப்போம் வாருங்கள்
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...