புள்ளிவிவரச் சுவாரசியங்கள்
புள்ளி விவரங்கள்
போரடிக்கக் கூடியவைகள்தான்.
ஒரு சில வரையறைகளை
அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் புள்ளிவிவரங்களை கேள்விப்படும் போது சமயங்களில்
புள்ளிவிவரங்கள் சுவரசியமாகி விடுவதுண்டு.
நகர்ப்புறத்தில்
நாளொன்றுக்கு ரூபாய் 32ம், கிராமப்புறத்தில் ரூபாய் 26ம் சம்பாதித்தால் அவர் வறுமைகோட்டுக்கு
மேல் உள்ளவர் என்ற வரையறையைக் கேட்டாலே அதிர்ச்சியே அடைந்து விடுவீர்கள். அதன் அடிப்படையில்
சொல்லப்படும் புள்ளிவிவரங்களைக் கேள்விப்பட்டால் மயக்க நிலையையே அடைந்து விடுவீர்கள்.
இப்போது
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கான வரையறையை
எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆண்டுக்கு
எட்டு லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினராகக்
கொள்ளத்தக்கவர் என்பதுதான் அந்த வரையறை.
ஆண்டுக்கு
எட்டு லட்சம் என்றால் மாதத்துக்கு அறுபத்து ஆறாயிரம் சொச்சம் வருமானம் வரும். ஒரு
நாளுக்கு மூவாயிரத்து இருநூறு சொச்சம் வருமானம் வரும்.
ஆனால் பாருங்கள்!
இரண்டரை லட்சத்துக்கு
மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமானவரி செலுத்தும் பட்டியலின் கீழ் வருவார்கள்.
தற்போது அந்த எல்லை ஐந்து லட்சம் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
ஆண்டுக்கு
எட்டு லட்சம் வருமானம் என்றால் அவர் வருமான வரி செலுத்தும் கணக்கில் வருவாரா மாட்டாரா?
வருமான வரி செலுத்தும் ஒருவர் பொருளாதாரத்தில் பின்தங்கியவரா பொருளாதாரத்தில் வளர்ந்தவரா?
இப்போது
மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வந்தால் நாளொன்றுக்கு முப்பத்து இரண்டோ, இருபத்து
ஆறோ சம்பாதிப்பவர் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர் என்றால் ஆண்டுக்கு எட்டு லட்சம்
சம்பாதிப்பவர் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவரா? அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கியவரா?
*****
No comments:
Post a Comment