6 Feb 2019

மூடப்பட்ட தொழிற்சாலை


மூடப்பட்ட தொழிற்சாலை
தூக்க மாத்திரைகளின் விலை உயர்த்தப்பட்ட நள்ளிரவில்
இக்கசப்பு மருந்தை ஏற்றுக் கொள்வீர் என
அறிக்கை விட்டார் சம்பந்தப்பட்ட அமைச்சர்
தூங்க முடியாத விரக்தியில் இருந்தவர்களுக்கு
அறிக்கையைப் படிக்கப் படிக்க
மண்டிக் கொண்டு  வந்தது தூக்கம்
தூக்கத்தில் ஆழ்ந்து போன மக்களால்
விற்காமல் போன தூக்க மாத்திரைகளுக்காக
தூக்கம் தொலைத்து அறிக்கை மேல் அறிக்கை எழுதி
உசுப்பிப் பார்த்து முடியாமல் போன நள்ளிரவில்
தன் தூக்க மாத்திரை தொழிற்சாலையை
மூடுவதென முடிவெடுத்தார்
உறங்கியபடியே விழித்துக் கொண்ட மக்களை
உறக்கத்திலும் கனவு காணாத அமைச்சர் பெருமானார்
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...