17 Feb 2019

பதினாறு அடி பாய்ந்த குட்டி



புதிய தலைமுறைக் கதைகள்
மாரியின் சவ ஊர்வலம் நூற்றாண்டு ஆர்ச்சை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கலவரம் ஏற்படாமல் இருக்க போலீஸார் ஆங்காங்கே கூட்டமாக லத்திகளை உயர்த்திப் பிடித்தபடியே நின்று கொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் இடுப்பில் இருக்கும் துப்பாக்கியைத்  தடவிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஊர்வலம் டெர்மினஸை நெருங்கிய போது மாரியின் பூத உடல் காணவில்லை.
எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கும் சூழ்நிலை.
"படா கேடி மாரியோட பொணத்தையே ஆட்டைய போட்டுட்டானுங்களே!" கூட்டம் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதது.
"எவனா இருந்தாலும் சாய்ச்சுபுடணும்டா!" என்று கூவினான் மாரியின் லெப்ட் கத்திகுமாரு.
"ஏய் ஏய் எவன்டா அவன்? பீஸூ பீஸூ ஆகப் போறான்டா!" என்றான் மாரியின் ரைட் அன்னகாவடி.
மாரியின் மூத்த மகன் புல்லட்பாண்டி மைக் பிடித்தபடி வண்டிமேலேறினான். "யாரும் கலீஜ்ஜூ ஆவாதிங்க. டாடியோட பொணத்தை நான்தான் தூக்குனேன். டாடி உடம்ப மெடிக்கல் காலேஜூக்கு எழுதிக் கொடுத்திருக்கு. உங்ககிட்ட சொன்னா நீங்க ஒத்துக்க மாட்டீங்க. சமாதி பூசையெல்லாம் பண்ணணும்னு அடம் பிடிப்பீங்க. அதான் தூக்கிட்டேன்!"
கூட்டத்திற்கு ஒரு கணம் மெய் சிலிர்த்தது.
"புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? குட்டி பதினாறு அடி பாய்ஞ்சிடுச்சிடா!" என்று கூட்டம் ஆர்பரித்தது.
போலீஸாரின் லத்திகள் தரையைத் தொட்டன. இன்ஸ்பெக்டர் துப்பாக்கியைத் தடவிக் கொண்டிருந்த கையை எடுத்து தன் நெஞ்சைத் தடவிக் கொண்டார்.
*****

No comments:

Post a Comment

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் மற்றும் சமரசமற்ற ஒன்று

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் அவர்கள் பிரமாண்டவர்களாக ஆனார்கள் தனித்துவம் மிக்கவர்கள் என உலகம் கொண்டாடியது அவர்கள் முன் நான் சாத...