17 Feb 2019

நவயுகக் கவிதைகள்

நாக்கற்றவர்களின் குரல்கள்
செருப்பில்லாதப் பாதங்களின்
விம்மல்கள்
குழிப்புண் வந்த சாலைகளுக்கு
எப்படித் தெரியும்
மூழ்கும் கப்பலின்
ஓலங்கள்
குபுக் குபுக் என்று உட்புக விடும்
ஓட்டைகளுக்கு
எப்படிப் புரியும்
முப்பொழுதும் பேரங்களுக்கு
ஈடுகொடுக்கும் கீரைக்காரக் கிழவியின்
தொண்டைச் செருமல்
கந்துவட்டிக்காரனின் தொண்டைகள்
எப்படி அறியும்
இரவை விற்று பகலில் உறங்குபவனின்
அகோரப் பசி
கமிஷன்களில் ஏப்பமிடும் வயிறுகளுக்கு
எப்படி விளங்கும்
ஏழைகளுக்குப் போட்ட நகைகள்
எப்போதும்
அடகுக் கடையில் பாதுகாப்பாக இருக்கும்
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...