5 Feb 2019

பூவுலகின் புதுமைச் சிந்தனையாளர்கள்


பூவுலகின் புதுமைச் சிந்தனையாளர்கள்
ஒரு ஜோடிக் காலணியும் அத்தோடு
மூன்றாவதாக ஒரு ஸ்பேர் காலணியும் கேட்டவருக்கு
மூன்றாவது இடது காலுக்கா வலது காலுக்கா என்று
குழம்பிய கடைக்காரர் கேட்டபடியே
மூன்றோடு நான்காவதாக ஒரு காலணியைச் சேர்த்து
மற்றொரு ஜோடியை எடுத்துப் போட்டார்
புதுமையானச் சிந்தனைக்காக
அந்நான்காவதாக ஒரு காலணியைத் தருவதாகக் கூறியவர்
மூன்று ஜோடிக் காலணி விலையில்
இரண்டு ஜோடிக் காலணியை விற்ற திருப்தியில் இருந்தார்
ஒரு ஜோடிக் காலணி விலையில்
இரண்டு ஜோடிக் காலணி வாங்கி விட்டதான
திருப்தியில் சென்று கொண்டிருந்த புதுமைச் சிந்தனையாளர்
நுகர வாய்ப்பில்லாத குடோனின் வாயிலைத்
திறந்து விட்டிருப்பது அறியாத தலைக்கணத்திலிருந்தார்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...