26 Feb 2019

நட்சத்திரக் கவிதை


விசால மனசுக்காரர்கள்
நிறைய விண்மீன்கள் இருப்பதைச் சுட்டி
வேண்டியதை எடுத்துக் கொள்ளக் கூறினாய்
வானம் எங்கே இருக்கிறது
நான் எங்கே இருக்கிறேன்
ஒற்றை நிலவை வைத்து
கரைத்தும் நிறைத்தும் காட்டும்
மாயக்காரர் நீ என்பது எனக்குத் தெரியும்
உம் பூந்தோட்டத்தின் ஒற்றைப் பூவைப் பறிக்க
அனுமதிக்காத நீயா
நட்சத்திரங்கள் கொள்ள அனுமதிப்பாய்
மனசு விசாலப்பட்டு என்ன
கைகள் குறுகியிருக்கிறது
பேச்சு பேச்சாகவே இருக்கிறது
அந்தக் கோட்டைத் தாண்டி
நீயும் வர மாட்டாய்
நானும் வர அனுமதிக்க மாட்டாய்
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...