25 Feb 2019

ஒரு கோப்பைக் கவிதை



கழுவிக் கழுவி ஊற்றுதல்
தேநீர்க் கடையில்
தேநீரும் கொஞ்சம் சோகங்களும்
பரிமாறிக் கொள்ளப் படுகிறது
முடிவில் இரண்டும் காலியாகிறது
காலி கண்ணாடிக் குவளையை வாங்கி
கடைக்காரர் கழுவி ஊற்றி
தேநீரை நிரப்புவதற்குள்
இன்னொருவரின் சோகம் தளும்பி விடுகிறது
பருகுதலின் முடிவில்
வழக்கம் போல் காலியாகிறது
கழுவிக் கழுவி ஊற்றப்படும் சோகங்களுக்காக
கொதித்துத் கொதித்துத் தயாராகும்
தேநீரைப் பார்க்கும் போதெல்லாம்
அந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் சோகங்களையும்
கொஞ்சம் கழுவி ஊற்ற முடிந்திருந்தால்
எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...