22 Feb 2019

எக்ஸ்பர்ட் கவிதைகள்


வல்லுநர் குழு
இனிமேல் இந்தப் புலி
ஓடக் கற்றுக் கொண்டு
என்னவாகப் போகிறது
மான்களைப் பிடிக்கவோ
முயல்களைத் துரத்தவோ
எதற்காக ஓட வேண்டும்
ஓடப் பயிற்சி அளிப்பதற்கான
வல்லுநர்கள் உருவாக்கப்படுவார்கள்
புலிப் பயிற்சியாளர்கள் எனப்
பெயர் பெறுவார்கள்
அதனாலென்ன
கூண்டில் வாழும் புலிக்கு
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...