21 Feb 2019

தெறி கவிதை


அதுவொரு சட்டம் அதுவொரு நீதி
திருடும் வரை திருடன்
திருடிய பின் தர்மகர்த்தா
நியாயந்தானா இறைவா
அமுக்கும் வரை பிராடு
அமுக்கிய பின் அரசியல்வாதி
நியாயந்தானா பாரத மாதா
லபக்கும் வரை கொள்ளையன்
லபக்கிய பின் கார்ப்பரேட்
நியாயந்தானா நாடுகளின் நாட்டாண்மைக்காரரே
புரியும் வரை ஊழல்
புரிந்த பின் தலைவர்
நியாயந்தானா நல்லரசே
செய்வதெல்லாம் தப்பு
செய்த பின்னே பிழைக்கத் தெரிந்தவர்
நியாயந்தானா நல்லறமே
உன்னால் முடிந்தால்
நீயும் செய் என்றால்
என்னால் முடிந்து
நானும் செய்தால்
உன் சட்டங்களும் நீதிகளும்
ஏன் சும்மா இருப்பதில்லை
*****

No comments:

Post a Comment

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள்

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள் எவ்வளவோ விளக்கங்கள் எத்தனையோ தத்துவங்கள் எண்ணிச் சொல்ல முடியாது அவ்வளவு ஆறுதல்கள் அத்தனை அழுகைகள் ...