2 Feb 2019

ஞாபகம் வற்றிப் போய் நாளாகி விட்டது


ஞாபகம் வற்றிப் போய் நாளாகி விட்டது
மூன்று சக்கர வண்டியில் பயணிக்கும் ஒருவனை
முந்திக் கொண்டு பயணிக்கிறது பாதை
பாதையின் வேகத்துக்கு
பத்தடி இருபதடி எண்பதடி நூறடி
இருவழி நான்குவழி போதாது
எட்டு வழிச் சாலை வரினும் வேகமெடுக்கும்
அதே இடத்தில் இருந்து கொண்டு
ஓடிக் கொண்டிருக்கும் பாதைகளைப் பார்க்க
அயர்ச்சியாகத்தான் இருக்கின்றது
சக்கரங்களைத் தேய்த்து விட்ட
மமதையில் இருக்கும் பாதைகளிடம்
தலை வணங்கி கியர் மாற்ற
அனுமதிக் கேட்கும் கணத்துக்குள்
முந்திக் கொண்டுப் பயணிக்கிறது
பாதைகளைத் தேர்ந்து கொண்டவர்கள் என்ற
ஞாபகம் வற்றி நாளாகி விட்டது
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...