2 Feb 2019

மாரடைப்பில் தப்பித்தல்

மாரடைப்பில் தப்பித்தல்
மாதச்சுமை
கணக்கெடுக்கிறது வாசிக்கிறது பயணிக்கிறது
அங்கும் இங்கும் அனுப்பி வைக்கிறது
களைப்பு மலைப்பாக இருக்கிறது
சலிப்பு மலையாக நிற்கிறது
ஓய்வுக்காக வாரத்தின் எட்டாம் நாள்
தேவையாக இருக்கிறது
சத்தமாகப் பாடினால் லேசாகலாம்
இரைச்சல் சுற்றி சூழ்ந்திருக்க
எவ்வளவு உரக்கப் பாடினாலும்
பாடும் குரல் பாடுபவருக்குக் கேட்கப் போவதில்லை
குறைந்தபட்சம் நான்கு முறையும்
அதிகபட்சம் எட்டு முறைகளும்
தெண்டனிட்டப் பிறகு
கொஞ்சம் ஓய்வு வழங்கப்படுகிறது
அதற்காக மனஉறுதியோடு முயலவும்
விடாமுயற்சியோடு செயல்படவும்
பயிற்சியளிக்கப்படுகிறது
சிறுக சிறுக முயன்றால் அடைந்து விடலாமென
சிறிது சிறிதாக நேரம் அபகரிக்கப்படுகிறது
அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது
ஒரு மாதிரியாக இருக்கிறது
தப்பிப்பது புரியவில்லை
மாரடைப்பு வந்து காப்பாற்றுகிறது
இயல்பாக இருக்க
இயல்பை மீறாமல் இருக்க
யாரும் கற்றுத் தர மாட்டார்கள்
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...