15 Feb 2019

அபயக்குரலின் கவிதைகள்


ஊழியங்களும் சேவகங்களும்
இருந்த மரங்களையெல்லாம் வெட்டி
சாலையமைத்தப் பிறகு
சாலையோரத்தில் மரம் நட
ஆணை வருகிறது
காட்டை அழித்து
ஆலையமைத்தப் பிறகு
அதன் நடுவே ஒரு பூங்கா அமைக்க
உத்தரவு வருகிறது
ஏரியைத் தூர்த்து
கட்டிடம் அமைத்தப் பிறகு
மழைநீர் சேமிப்பு அமைப்பு அமைக்க
காகிதம் வருகிறது
இருந்த மணலையெல்லாம்
களவாண்டு முடித்தப் பிறகு
மணல் குவாரியை மூட
தீர்ப்பு கிடைக்கிறது
எதுவும் உபயோகத்துக்காக வருவதில்லை
வருவதற்காக வருகிறது
கடமையாற்றி விட்டதாகப் போகிறது
பொதுவான அவர்களின்
ஊழியங்களையும் சேவகங்களையும் போல
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...