14 Feb 2019

புது யுகக் கவிதைகள்



அதற்கு மேல் சுவிஸ் பேங்கில் இடமிருக்காது
ஐம்பது லட்சம் எம்.பி.பி.எஸ்.
‍ஹைடெக்காக கேட்டு எழுதுபவன் ஐ.பி.எஸ்,
முப்பது லட்சம் புரபஸர்
பத்து லட்சம் டிரான்ஸ்பர்
பனிரெண்டு கோடி வைஸ் சான்ஸ்லர்
பங்களாவில் வார்டு கவுன்சிலர்
இருபதாயிரம் ஓட்டு
பிறந்தாலும் இறந்தாலும் நோட்டு
ஆயா வேலைக்கு அறுபதாயிரம் வெட்டு
காசு இருந்தால் கவர்மென்ட் ஜாப்
மாஸ் இருந்தால் கவர்மென்ட்டை பிடிப்பதற்கான ஆப்
தர்மாஸ்பத்திரியில் எல்லாத்துக்கும்
வெள்ளை கலர் மாத்திரை
பணமிருந்தால் பிணத்துக்கும் ராஜ உபச்சார யாத்திரை
அதற்கு மேல் சுவிஸ் பேங்கில் இடமிருக்காது
செவ்வாய் கிரகத்தில் இருக்கிறதா பாருங்கள்
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...