13 Feb 2019

புதிய வகைமை கவிதைகள்


சிலுவையின் நான்கு வெடிகுண்டுகள்
ஆலயத்தில் குண்டு வெடித்து இறந்தவன்
பிதாவிடம் சென்ற போது
என்னை ஏன் கொன்றீர் என்றான்
அவர் தன் வயிற்றைச் சுற்றிக்
கட்டப்பட்டிருந்த தானியங்கி வெடிகுண்டை
தடவிப் பார்த்துக் கொண்டார்
மெல்ல புன்னகைத்தவர்
வெடிகுண்டு படுக்கையில் படுத்திருந்த
கடவுள் ஒருவரையும்
கழுத்தில் வெடிகுண்டுச் சுருள் சுற்றப்பட்டிருந்த
கடவுள் ஒருவரையும்
கண்ணி வெடியின் மேல்
கால் வைத்த படி அமர்ந்திருந்த
கடவுள் ஒருவரையும் காட்டினார்
சிலுவையின் நான்கு முனைகளிலும்
காலக் கணக்குக் காட்டி ஒளிரும்
வெடிகுண்டுகளைச் சுட்டிக் காட்டியவர்
ஆணிகள் மாறி விட்டன
வெடிகுண்டுகள் பிறந்து விட்டன என்றதை
சீடர்கள் பதிந்து கொண்டு
முகநூல் டிவிட்டர் கணக்கைத் திறந்து
வாட்ஸ் அப்பை நோண்டத் தொடங்கினர்
சத்தமிடத் தொடங்கின அவலக் குரல்கள்
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...