12 Feb 2019

புதிய அரசியல் கவிதைகள்

நாம கரணம்
மனிதன் துடிதுடித்துச் சாவதையும்
புழுக்கள் துடிதுடித்து வாழ்வதையும்
சாக்கடை நதியில் பார்க்கிறேன்
அழுக்குகள் கசடுகள் கலந்து செல்வதையும்
உண்மைகள் நேர்மைகள் கலங்கி நிற்பதையும்
சாக்கடை நதியில் நீங்களும் பாருங்கள்
துர்நாற்ற துர்வீச்ச மயமாவதையும்
நன்னீரும் குடிநீரும் மாயமாவதையும்
சாக்கடை நதியில் யாவர்க்கும் கவனப்படுத்துங்கள்
இந்தச் சாக்கடை நதி
எங்கெங்கெல்லாம் இருக்கிறது பாருங்கள்
எங்கெங்கெல்லாம் ஓடுகிறது பாருங்கள்
அதன் பெயர் என்னவென்று விசாரியுங்கள்
அரசியல் என்று சொல்லாமல்
உங்கள் நகரத்து நதி என்றோ
கூவம் என்றோ பொய் சொன்னால்
தயவுசெய்து என்னை மன்னியுங்கள்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...