11 Feb 2019

புதிய தலைமுறைக் கவிதைகள்


மீட்பருக்கான பிரார்த்தனை
வர்களின் வண்ணங்களை
தெருவில் விசிறி எறிந்த பிறகு
அவர்களின் வானவில்லை
முறித்து போட்டப் பிறகு
அவர்களின் கனவுகளை
காயலான் கடையில் விற்ற பிறகு
அவர்களின் மனதில் மலர்ந்த
ஆயிரம் மலர்களை
இறுதி ஊர்வலத்தில் தூவிய பிறகு
அவர்களை ஏன் கொண்டாடுகிறீர்கள்
உங்களின் கெளரவத்துக்காக
உங்களின் பேராசைகளுக்காக
உங்களின் மன பண மோகத்துக்காக
காயடிக்கப்பட்டவர்களைக் கொண்டு வந்து
ஆசிர்வதிக்கச் சொல்லாதீர்கள்
ஆசிர்வதிக்கப்பட்டு பூமிக்கு வந்தவர்களை
சாத்தான்களில் குழந்தைகளாக்கி விட்டு
பூமியின் மனிதாபிமானம்
செத்து விட்டதாக ஒப்பாரி வைக்காதீர்கள்
உங்களுக்கான ஆதரவற்றோர் இல்லங்களில்
நீங்களே விண்ணப்பித்துச் சேர்ந்து
மீட்பருக்கானப் பிரார்த்தனையைத் தொடருங்கள்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...