1 Feb 2019

முத்த முதல் வட்டிக் கணக்கு


முத்த முதல் வட்டிக் கணக்கு
நேற்றுக்கும் சேர்த்து இன்றைக்கு
முத்தத்தைக் கேட்கிறாய்
உழைக்காத நேற்றுக்கு
இன்று கிடைத்தச் சம்பளத்தை
நேற்றுக்கானதாய்ச் சொல்லிக் கொடுக்கிறேன்
இன்றுக்கான முத்தத்தைக் கேட்டு
அடம் பிடிக்கிறாய்
நேற்று செய்யத் தவறிய ஒன்றுக்காக
நாளை வரை பொறுத்திரு முடியுமானால்
இன்று சரி செய்யப்படலாம்
இன்றையின் வெறுமையை அன்பே
வாங்கிப் பருகிக் கொள்
முற்றும் பருகி விடாமல்
எனக்குக் கொஞ்சம் மிச்சம் வை
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...