4 Jan 2019

உணவுப் பற்றாக்குறை சொல்லப் போகும் பாடங்கள்


உணவுப் பற்றாக்குறை சொல்லப் போகும் பாடங்கள்
பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள், ஏவுகணைகள் ஏற்றுமதி செய்யும் நாடுகள், அணுகுண்டுகள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் எதுவும் வருங்காலத்தில் தண்ணீரையோ, உணவையோ ஏற்றுமதி செய்யாது என்றே நினைக்கிறேன்.
தண்ணீர்ப் பற்றாக்குறையும், உணவுப் பற்றாக்குறையுமே வருங்காலத்தை ஆட்டிப் படைக்கும் முக்கிய பிரச்சனையாக இருக்கப் போகின்றன.
இப்போது மலிவாக இருக்கும் உணவு வணிகம் என்பது வருங்காலத்தில் மிகப்பெரிய வணிகமாக உருவெடுக்கும்.
பெட்ரோல் இல்லாமல், ஏவுகணைகள் இல்லாமல், அணுகுண்டுகள் இல்லாமல் வாழ்வதில் பெரிய சிக்கலேதும் இருக்கப் போவதில்லை. ஆனால் தண்ணீரோ, உணவோ இல்லாமல் வாழ்வது என்பது சவாலானது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீருக்கும், விவசாயத்துக்கும் நாம் என்ன முக்கியத்துவம் தந்து விட்டோம்?
தண்ணீரைப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கிட்டுக் கொண்டு பாட்டிலில் இஷ்டத்துக்கு விலை வைத்து விற்க அனுமதி தந்திருக்கிறோம்.
விவசாயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், நாட்டில் தற்கொலை செய்து கொண்டு இறப்பவர்களில் கணிசமானவர்கள் விவசாயிகள்.
விவசாயிகள் கடன் வாங்கிச் சாவதும், விவசாயிகளுக்கு கடன் கொடுத்தவர்களும், இடுபொருள் விற்றவர்களும் வளமாக வாழ்வதும் சமீப கால சாட்சியங்கள்.
சில பத்தாண்டுகளுக்கு முன் தற்சார்பாக இருந்த விவசாயம் எப்போது விதைநெல்லுக்கும், உரத்துக்கும், பூச்சிக்கொல்லிக்கும், முதலீட்டுக்கும் கடனை நம்பிக் குடை சாய்ந்ததோ அன்றே விவசாயம் தனக்கான மதிப்பீட்டிலிருந்து தலைகீழாக வீழ்ந்தது.
இன்றும் அது தலைகீழாக விழுந்துதான் கிடக்கின்றது. அதற்கு மானியம் கொடுப்பதாகவும், எளிய வட்டியில் கடன் கொடுப்பதாகச் சொல்வதும் நிச்சயம் கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுக்கும் சலுகைகள் மற்றும் கடன் தள்ளுபடிகளை விடவும் குறைவுதான்.
எந்த விவசாயத்தை வணிகச் சூழ்ச்சிகள் ஒன்று கூடி வீழ்த்தினவோ, அதே வணிகச் சூழ்ச்சிகளை தன்னிடம் கை ஏந்த வைக்கும் நிலையை நிச்சயம் காலம் உருவாக்கும். அப்படியான ஒரு உணவுப் பற்றாக்குறையை உலகம் எதிர்கொள்ளத்தான் நேரிடும். வெறும் உணவுப் பற்றாக்குறை என்று மட்டும் இதைச் சுருக்கி விட முடியாது. தரமான உணவுக்கானப் பற்றாக்குறையாகவும் அது இருக்கும்.
இவ்விசயத்தில் என்னுடைய விவசாய அனுபவத்தை நாளை பகிர்கிறேன்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...