4 Jan 2019

சொல்லுங்கள் அன்பர்களே


சொல்லுங்கள் அன்பர்களே
பிரச்சனைகளைப் பகிர்வதா வேண்டாவா
இரக்கம் காட்டுவீர்கள்
அன்பு செய்வீர்கள் என்றுதானே பகிர்கிறேன்
நீங்களோ பலவீனத்தை அறிந்து விட்டதாக மகிழ்கிறீர்கள்
எதிர்பார்த்த அன்பிற்கும், இரக்கத்திற்கும் மாறாக
நிலைமை பரிதாபமாக மாறிய பின்
அதற்கு முன்பிருந்த நிலைமையே மேல்
என்பதாக ஆகி விடுகிறது
இப்போது சொல்லுங்கள்
பிரச்சனைகளைப் பகிர்வதா வேண்டாவா
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...