14 Jan 2019

தேவை சில ஜனநாயக மாற்றங்கள்


தேவை சில ஜனநாயக மாற்றங்கள்
ஒரு தவறான நபரைத் தேர்ந்தெடுத்து விட்டால் அடுத்து ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும் ஒரு சரியான நபரைத் தேர்ந்தெடுப்பதற்கு. அதுதான் ஜனநாயகம்.
தவறான நபரைத் தேர்ந்தெடுத்து விட்டால் அவரைத் திரும்ப அழைப்பதற்கு ஜனநாயகத்தில் வாய்ப்பு இருக்க வேண்டும்.
இது ஒரு பிரச்சனை என்றால்...
நிற்பவர்கள் எல்லாம் தவறான நபர்கள் என்றால் நிற்கின்ற தவறான நபர்களில் கொஞ்சம் சரியான நபர் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.
சரியான நபர்கள் நோட்டாவுக்கு ஓட்டளிப்பதோடு தங்கள் கடமை முடிந்து விடுவதாக நினைக்கிறார்கள்.
முன்புபோல் இல்லை ஜனநாயகத் திருவிழா. ரொம்ப காஸ்ட்லியான திருவிழாவாக நடக்க ஆரம்பித்து விட்டது.
அப்போது புழங்குகின்ற பணப்புழக்கத்தைப் பார்க்கையில், இதற்கெனவே பணத்தை அச்சடிக்கிறார்களோ என்ற சந்தேகம் வந்து தொலைக்கிறது.
எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது என்பவர்கள் ஓட்டுக்கும் ஒரு விலை இருக்கிறது என்று கூவுகிறார்கள்.
ஓட்டுக்குக் கொடுத்த விலைக்காக அதற்குப் பின் மாபெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.
அந்த விலை என்பது,
உப்புமா பொட்டலத்தில் ஆரம்பித்து, புளியோதரை தயிர் பொட்டலத்துக்கு வந்து பிரியாணி பொட்டலம் வரை வந்தாயிற்று. சோப்பு டப்பாவில் ஆரம்பித்து குத்து விளக்கு, காமாட்சி விளக்கு என வந்து ஆயிரம் ரெண்டாயிரம் என வந்தாயிற்று.
கொடுப்பவர்கள் யாரும் ச்சும்மா கொடுக்கவில்லை. சிறிய மீனைப் போடுகிறார்கள் திமிங்கலத்தைப் பிடிப்பதற்கு.
ஓட்டை எப்படி வாங்குவது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றால் அதற்கு எப்படிப் பேரம் பேச வேண்டும் என்பதும் மக்களுக்கும் தெரிந்திருக்கிறது.
நல்லவர்கள் எனக் கருதப்படுபவர்கள் குறைந்த வாக்குகள் பெற்றாலும் அவர்களுக்கும் பிரதிநிதிதுவப்படுத்தும் வகையில் ஜனநாயகத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய முடியாதா?
உதாரணத்துக்கு ரெண்டு லட்சம் ஓட்டுகள் உள்ள ஒரு தொகுதியில் ஒரு நல்லவர் நின்று பத்தாயிரம் ஓட்டுகளைப் பெற்றிருக்கிறார் என்றால் அவருக்கு அந்தத் தொகுதியில் பத்தாயிரம் மக்களின் ஆதரவு இருக்கிறது என்றுதானே பொருள். அந்தப் பத்தாயிரம் மக்களின் குரலை அவர்தானே ஒலிக்க முடியும். அப்படி அந்தக் குரலை ஒலிப்பதற்கான ஒரு வாய்ப்பாகவாவது அவரைப் பிரதிநிதிப்படுத்தும் வகையில்  இந்த ஜனநாயகத் தேர்தலில் மாற்றம் ஏதேனும் செய்ய வேண்டும்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...