14 Jan 2019

சினிமாவில் ஊறி விட்ட தமிழன்


சினிமாவில் ஊறி விட்ட தமிழன்
இந்த ப்ளாக்கில் சினிமாவைப் பற்றி எழுதினால் நிறைய பேர் படிக்கிறார்கள்.
இந்த இணைய உலகத்திலும் சினிமாவை விடாமல் பற்றியிருக்கிறான் தமிழன். சினிமா பற்றி கிசுகிசுக்கள், சினிமா பற்றி தேடல்களுக்காக இணையத்தில் கணிசமாக தேடலை நிகழ்த்துகிறான் தமிழன்.
தமிழன் தனக்கான தத்துவங்களை சினிமா மூலமே அடைய விரும்புகிறான். நீங்கள் நிறைய பட்டிமன்றங்கள், பேச்சு அரங்கங்களைக் கேட்டால் இந்த உண்மை புரிய வரும். விளக்குபவர்கள் சினிமா பாடல்களை நிறைய பயன்படுத்துகிறார்கள்.
சினிமா பாடல் சொல்லிச் சொன்னால்தான் எதுவும் புரியும் என்ற நிலைமைக்கு வந்து விட்டான் தமிழன். இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று சினிமாவைப் பாராட்டுவதைத் தவிர வேறு என்ன செய்வது?
பாடங்களை வடிவேலு பாணியில் சொன்னால்தான் புரிந்து கொள்வேன் என்ற வகைமைக்கு தன் பிஞ்சகளையும் அவன் வடிவமைத்து விட்டான்.
தன்னுடைய நிகழ்காலத்தைத் தமிழன் சினிமா மூலமே புரிந்து கொள்ளவும் விரும்புகிறான். தன்னுடைய முதல்வர், பிரதமர் போன்றவர்களையும் சினிமா மூலமே தேர்ந்தெடுக்கப் பிரியப்படுகிறான்.
தமிழனைப் போல சினிமா பிரியம் கொண்டவர்கள் உலகில் வேறெங்கும் இருப்பார்களா என்பது புரியவில்லை. தனது சினிமா பிரியத்தின் உச்சமாக அவனது தலைவராகவும் சினிமா நாயகர்களே இருக்கிறார்கள்.
ரஜினி, கமல், சீமான் என்று வரிசைகட்டி அரசியல் என்ட்ரி கொடுப்பதற்கும் தமிழனின் சினிமா பிரியமே பிரதான காரணம்.
எனக்கு என்னமோ சினிமா இல்லையென்றால் தமிழன் செத்து விடுவான் போலத் தோன்றுகிறது.
அப்பன், ஆயி, பாட்டன், பாட்டி, முப்பாட்டன், முப்பாட்டிச் சொல்லி கேட்காதவன் சினிமா சொன்னால் கேட்கிறான்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...