13 Jan 2019

பேட்ட - ஒரு பார்வை


பேட்ட - ஒரு பார்வை
சிஸ்டம் சரியில்லன்னு சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி, காலான்னு நடிச்சுப் பார்த்துட்டு,
இந்த சிஸ்டத்தையெல்லாம் சரி பண்ண முடியாதுன்னு நடிச்சு இருக்கற மாஸ் எண்டர்டெய்னர் படம்தான் 'பேட்ட'
'பேட்ட' படங்றது சிம்பிளான ஒரு ரிவென்ஜ் ஸ்டோரிதாங்க.
எத்தனையோ படங்கள்ல பார்த்துப் பார்த்துப் பழகிப் போன ஒரு ரிவென்ஜ் ஸ்டோரியை எடுத்துகிட்டு அதை ரஜினிக்கு ஏத்த மாதிரி பட்டி டிங்கரிங் பார்த்து ரஜினியோட பேன்ஸ் விரும்பு மாதிரி எடுத்து இருக்காங்க.
சிம்பிளா சொல்லணும்னா...
ரஜினியோட பாட்ஷா படத்தோட ப்ளாஸ்பேக்கை எடுத்துகிட்டு, அதுல ரஜினியோட தளபதி படத்தோட ஆக்சனை மிக்ஸ் பண்ணுனா எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கு பேட்ட.
மரண மாஸ்னு அவங்களே சொல்லிட்டதால இறங்கி அடிக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க பாஸ். அவ்வளவு இறங்கி அடிச்சு இருக்காங்க மக்கா!
செம எண்டர்டெய்னர் மூவின்னாலும் திரையில தெறிக்கிற ரத்தம் இருக்கு பாருங்க, ஐயோ! தாங்கலடா சாமி!
பொங்கல் சமயத்துல ஒரு ரத்தக் குழம்பே வெச்சு இருக்காங்க!
இந்தப் படத்தோடு பர்ஸ்ட் ஹாப் செம பாஸ்ட்னா, செகண்ட் ஹாப் இருக்கே சும்மா  ஜவ்வு மாதிரி செம இழு இழுன்னு இழுக்கிறாங்க. அதுதாங்க கார்த்திக் சுப்புராஜூவோட ஸ்டைலோன்னு நினைச்சு,
நீங்க பீட்சா, ஜிகிர்தண்டா மாதிரி எதிர்பார்த்துப் போனீங்கனா, சத்தியமாக ஏமாந்துடுவீங்க நண்பா!
த்ரிஷா, சிம்ரனையெல்லாம் எதிர்பார்த்து இந்தப் படத்துக்கு நீங்க போக மாட்டீங்க. அப்படியே போனாலும் அவங்களுக்குப் படத்துல பெரிசா வேலை இல்ல.
இண்டர்வெல்லுக்கு அப்புறமா வர்ற விஜய் சேதுபதி வெச்சு செஞ்சுருக்கார். செம கெத்து காட்டுறார். சான்ஸே இல்லப்பு! விஜய் சேதுபதிதான் இப்படில்லாம் நடிக்க முடியும். இப்படினா படத்துல மட்டும் இல்ல, ஒரு ஹீரோவ நடிச்சுகிட்டு இப்படியும்னுங்றதுதான்.
இந்தப் படத்துல எதுக்கு இவ்ளோ நட்த்திரப் பட்டாளம்னு தெரியல. ரொம்ப மாஸா எடுக்கணும்னு நிறைய கூட்டத்தைக் கூட்டிட்டாங்க போலிருக்கு.
ஒரு சின்ன கமெண்ட் என்னான்னா,
இன்னும் கொஞ்சம் சிறப்பாவே எடுத்து இருக்கலாம்னு சொன்னாலும் பொங்கலைத் தெறிக்க விட்டுட்டாங்க.
ஆமா என் சினிமா ரத்தம் ஊறிய உயிரினும் மேலான என் உடம்பிறப்புகளே,
பேட்ட வசூல் வேட்ட
ரஜினிக்கு மாஸ் கோட்ட
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...