15 Jan 2019

பேட்டை நாவல் - ஓர் எளிய அறிமுகம்


பேட்டை நாவல் - ஓர் எளிய அறிமுகம்
தமிழ்ப்பிரபாவின் பேட்டை எனும் நாவல் மத்திய சென்னை பேட்டைவாசிகளின் வாழ்வியலைப் பேசும் ஓர் எழுத்தோவியம்.
அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் மாடர்ன் பிட் சுங்குராமரிடமிருந்து பறித்த ராமர் தோட்டத்தில் நெசவாளர் குடியேற்றங்களை ஏற்படுத்துகிறார். சின்ன சின்ன தறிகள் மிகுந்த அந்த இடம் சின்னதறிப்பேட்டை என அழைக்கப்பட்டு காலப்போக்கில் சிந்தாதரிப்பேட்டை என மருவுகிறது.
சிந்தாதரிப்பேட்டையில் ஏவல் வேலைகள் செய்வதற்காக அழைத்து வரப்பட்டவர்கள் கூவம் ஆற்றங்கரையில் குடிசைகளை அமைத்து தங்குகின்றனர். பின் அவர்களுக்கு ஹவுசிங் போர்டுகளில் தங்குவதற்கு வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. அங்கு தங்கியிருக்கும் மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்வில் கலந்திருக்கும் கிறித்துவம், கேரம் போர்டு, வசவுமொழிகள், குடி, போதை, மரணங்கள், கானாப்பாடல்கள் பற்றியெல்லாம் ஒருங்கே கூடிய பதிவுதான் இந்நாவல்.
தமிழ்ப்பிரபா ரூபன் எனும் கதாப்பாத்திரம் மூலம் எழுதிக் கொண்ட சுயசரிதை கலந்த புனைவே இந்நாவல் எனலாம். இந்நாவல் வாய்மொழி வாயிலாக வழங்கப்பட்டு வரும் பல உண்மைச் சம்பவங்களுக்கான எழுத்துப் பதிவாகவும் கொள்ளத்தக்கது.
தனது நண்பர்களின் மிகுகுடியால் நிகழ்ந்த மரணங்களால் எழுந்த நாவல் என இந்நாவல் எழுதக் காரணமான தோற்றுவாய் பற்றித் தமிழ்ப்பிரபா குறிப்பிடுகிறார்.
மரணங்கள் ஏற்படுத்தும் மனப்பிறழ்வால் நாவலின் மையச்சரடானப் பாத்திரமான ரூபன் பாதிக்கப்படுகிறார். ரூபன் ஏன் அம்மரணங்களால் பாதிக்கப்படுகிறார், அதன் பின்புலங்கள் என்னென்ன, பின் எப்படி அப்பாதிப்பிலிருந்து மீள்கிறார் என்பதையெல்லாம் இந்நாவலை வாசிப்பதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
காலச்சுவடு வெளியிட்டிருக்கும் இந்நாவலை நீங்கள் காலச்சுவடு பதிப்பகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அதற்கான முகவரி,
காலச்சுவடு,
669, கே.பி.சாலை,
நாகர்கோயில் - 629001
காலச்சுவடுக்கான தொடர்பு எண்  - 91 4652 278525
காலச்சுவடுக்கான மின்னஞ்சல் - publications@kalachuvadu.com
ஆசிரியர் தமிழ்ப்பிரபாவைத் தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல் - prabha.prabakaran@gmail.com
நாவல் குறித்த மேலும் அதிக வாசக அனுபவத்தையும் நீங்கள் இந்த வலைப்பூவில் வாசித்துத் தெரிந்து கொள்ளும் வகையில் விரிவாக எழுதியிருக்கிறேன். அதை விரும்புபவர்கள் இவ்வலைப்பூவில் அதையும் வாசித்து அறிந்து கொள்ளலாம்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...