மத்திய
சென்னை மாநகர வாழ்வை முன்வைத்து வெளிவந்திருக்கும் தமிழ்ப்பிரபாவின் 'பேட்டை' நாவல்
பெருநகர வாழ்வின் அறியப்படாத பல முடிச்சுகளைக் கொண்ட ஒரு நாவல்.
நாவலின் சுருக்கமான முன்கதை என்னவெனில்,
அதற்கு
முன் நாவல் பிறந்ததற்கான முன்கதையைச் சொல்கிறார் தமிழ்ப்பிரபா.
அந்த முன்கதையாகப்பட்டது,
அப்போதைய
மதராஸ் ராஜதானி எனும் சென்னை மாகாணத்தின் பதினான்காவது ஆளுநர் மாடர்ன் பிட்.
இங்கிலாந்தில்
ஏற்படும் காலிகோ வகை துணிகளுக்கானத் தேவைக்காக அதை உருவாக்கித் தரும் நெசவாளர் குடியிருப்பை
சென்னையில் உருவாக்க நினைக்கிறார் பிட்.
குடியிருப்புக்கு
இடம் வேண்டுமே!
சுங்குராமர்
என்பவரின் ராமர் தோட்டத்தில் இருக்கும் வில்லங்கத்தை மூர்த்தியப்ப நாராயண செட்டி பிட்டின்
காதில் போடுகிறார்.
ராமர்
தோட்டத்திற்கான முறையான பத்திரங்கள் சுங்குராமரிடம் இருந்தும் கல்கத்தா கெளன்சிலின்
ஒப்புதலைப் பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி சுங்குராமரிடமிருந்து ராமர் தோட்டத்தைப்
பறிக்கிறார் பிட்.
இதைத்
தாங்க முடியாமலும் எதிர்த்தும் போராட முடியாமலும் சுங்குராமர் அத்தோட்டத்தில் கட்டிய
காரனேஸ்வரி கோயிலில் தூக்கில் தொங்குகிறார்.
சுங்குராமர்
சுயபலியிட்டுக் கொண்ட அந்தத் தோட்டத்தில் காலிகோ துணிகளை உருவாக்குவதற்கான குடியேற்றங்கள்
உருவாக்கப்படுகின்றன.
அந்தப்
பகுதி முழுவதும் சிறிய தறிகளைக் கொண்ட பேட்டையாக உருவாகிறது. சின்ன சின்ன தறிகளைக்
கொண்ட அந்த பேட்டையே சின்னதறிப்பேட்டையாக பெயர் பெற்று நாளடைவில் மருவி சிந்தாதரிப்பேட்டையாகிறது.
அந்தச்
சிந்தாதரிப்பேட்டையின் வாழ்வியலையே 'பேட்டை' நாவல் பேசுகிறது.
சாதி
அடிப்படையில் மக்கள் சிந்தாதரிப்பேட்டையில் குடியேறுகிறார்கள். பிராணமர் தெரு, நாயக்கர்
தெரு, பிள்ளைமார் தெரு, செட்டியார் தெரு என்று ஜாதி அடிப்படையில் தெருக்கள் உருவானப்
பிறகு எஞ்சியுள்ளவர்களை அவர்களுக்கு ஏவல் வேலை செய்யும் பொருட்டு தெருக்களுக்கு வெளியே
குடியிருக்க நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கிறார்கள். அவர்கள் கூவத்தின் கரைகளில்
தங்களுக்கான குடிசைகளை அமைத்துக் கொள்கிறார்கள். தேங்காய் தண்ணீரைப் போல கூவம் நீர்
ஓடிய அந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் தண்ணீர் எடுக்கக் கூட தெருக்களுக்கு செல்ல வேண்டிய
அவசியம் இல்லாமல் போகிறது.
நகரமயமாதலால்
ஈர்க்கப்பட்டு குடியிருப்பில்லாமல் வரும் மக்கள் கூவக்கரையிலேயே தங்குகிறார்கள்.
தொழில்மயமாதலின்
கோரமுகம் அனைத்துக் கழிவுகளையும் கூவம் நதியில் திறந்து விட அதற்கு எதிர்ப்பு காட்டும்
வகையில் கருப்புக்கொடி காட்டுவது போல கருந்திரவம் சுமக்கும் நதியாக நகர ஆரம்பிக்கிறது
கூவம்.
கூவக்கரையில்
மக்கள் பெருகுகிறார்கள். இடம் இல்லாதவர்கள் தார்ப்பாய்கள், கோணிப்பைகளைக் கொண்டு
கூரை அமைத்து நடைபாதையில் வசிக்கும் ப்ளாட்பாரவாசிகளாக ஆகிறார்கள்.
ஆயிரத்து
தொள்ளாயிரத்து அறுபத்து ஏழுகளில் குடிசைகளுக்கான வாழ்வாதாரம் குடிசை மாற்று வாரியம்,
புதிய குடியிருப்பு வாரியங்கள் மூலம் நிகழ்கிறார். குடிசை வீடுகள் வரிசையாக ஓட்டு வீடுகளாக
மாறுகின்றன. ப்ளாக்குகள் கொண்ட ஹவுசிங் போர்டுகள் உருவாகின்றன. என்றாலும் தேவை போதுமானதாக
இல்லை. கூவம் நதிக்கரை குடியிருப்புகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன.
கூவம்
நாற்றமெடுக்கத் தொடங்குகிறது. அந்த நாற்றத்திலும், கொசுக்கடியிலும், தொற்றுநோய்களின்
கூடாரத்திலும் மக்கள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர் என்ற பதிகிறார் தமிழ்ப்பிரபா.
இந்த
முன்கதைச் சுருக்கத்தைக் கடந்து தமிழ்ப்பிரபா நாவலைத் தொடர்கிறார்.
மிகப்பெரிய
காலஇடைவெளியை அதாவது அநேகமாக 230 வருட கால அளவை முன்கதையாக சற்றேறக்குறைய 16 பக்கங்களில்
கடந்த அவர் அதற்குப் பின்னான அநேகமாக முப்பது அல்லது முப்பத்தைந்து வருட அளவிலான கால
அளவை முந்நூறுக்கும் மேற்பட்ட பக்கங்களில் கடக்கிறார்.
இரயில்வே
ஸ்டேஷனில் கொய்யாப்பழக்காரரால் கண்டெடுக்கப்படும் ரெஜினா சிங்கப்பூரான் மகன் குணசீலனுக்கு
மணம் செய்து வைக்கப்படுகிறாள்.
பஜார்
தெருவில் கூவத்தின் அருகில் குடித்தனம் இருக்கும் ரெஜினாவுக்கு அந்தச் சூழல் ஒவ்வாமையாக
இருக்கிறது. குணசீலனிடம் சொல்லிப் பார்க்கிறாள். தனது அம்மா கிளியாம்பாள் குடியிருந்த
அந்த இடத்தை விட்டு வேறு எங்கும் போக முடியாது என்கிறான் குணசீலன்.
ரெஜினா
குணசீலனைக் கட்டிக் கொள்வதற்குக் காரணமான நாகம்மா எனும் நகோமியம்மா மூலம் கிளியாம்பாளின்
முன்கதைகளை அறியும் ரெஜினா கிளியாம்பாளைப் போல இருக்க முயன்று பார்க்கிறாள்.
வாயும்
வயிறுமாக இருக்கும் அவள் மனநிலைப் பிறழ்கிறாள். கிளியாம்பாள் தன் உடலில் புகுந்தது
போல் பேயாடுகிறாள்.
ரெஜினாவின்
பேயாட்டம் அல்லேலூயா சபையின் பாஸ்டரய்யா மூலம் முடிவுக்கு வருகிறது.
ரெஜினா
ஜெபத்தில் ஆழ்கிறாள். கணவனோடான பாலுறவை வெறுக்கிறாள். குணசீலன் இன்னொருத்தியுடன்
வாழ ஆரம்பிக்கிறான்.
ரெஜினாவுக்கு
ரூபன் பிறக்கிறான். அவள் எதிர்பார்த்தபடியே ஹவுசிங் யூனிட்டில் வீடு கிடைக்கிறது. நகோமியம்மா
ரூபனைப் பார்த்துக் கொள்ள மேலும் மேலும் ஜெபத்தில் ஆழ்கிறாள் ரெஜினா. சாட்சியாகவும்
செல்கிறாள். ரூபனும் அல்லேலூயாவின் வழியில் ரெஜினா காட்டும் முறைமைகளில் செல்கிறான்.
இரவு
பாடசாலையில் அவன் பார்க்கும் மூபினாவோடு காதல் கைகூட இயேசு கிறிஸ்துவிடம் அவன் பிரார்த்திக்கிறான்.
அவனது பிரார்த்தனைப் பொய்க்கும் அந்த இடத்திலிருந்து அவன் சபையின் சடங்கான வாழ்விலிருந்து விலகுகிறான்.
பச்சையப்பன்
கல்லூரியில் பேராசிரியர் பெரியார்தாசனின் அறிமுகத்துக்குப் பின் அவன் பெரியாரின் பாதையில்
பயணிக்க நினைக்கிறான்.
பள்ளிப்
பிராயத்தில் அவனுக்கு நண்பனாகக் கிடைக்கும் கேரம் ப்ளேயர் லாரன்ஸின் மகன் செளமியன்
ரூபனை ஒவ்வொரு முறையும் பரீட்சைகளிலிருந்து கடைத்தேற்றம் செய்து விடுகிறான். அவனது
இன்னொரு நண்பனான பாலு லாரன்ஸால் சிறந்த கேரம் பிளேயராக அடையாளம் காணப்பட்டு பின்னாட்களில்
பிளேயராகி அதன் மூலமே அரசு வேலைவாய்ப்பைப் பெறுகிறான்.
ஒருவழியாக
ரூபன் பன்னாட்டு ஐ.டி.கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறான். அவன் வீட்டுக்கே கார் வந்து
வேலைக்கு அழைத்துச் செல்கிறது, வேலை முடிந்த பின் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு
வந்த விடுகிறது.
அப்பன்
குணசீலனோடு குடித்தனம் நடத்தியவள் அவனை விரட்டி விட்டப் பிறகு குணசீலனும் ரூபனோடு
வந்து சேர்ந்து கொள்கிறார்.
அதே
நேரத்தில் ரூபனுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் உடன் வேலை பார்க்கும் கிரண்யாவோடு காதல்
வந்து முறிந்து போகிறது. ரூபன் அதை மறக்க சினிமா பார்த்தல், பேஸ்புக் பதிவுகள், புத்தக
வாசிப்பு என்ற தீவிரமாக இயங்குகிறான்.
இதற்கிடையில்
செளமியனிடமிருந்து வரும் அலைபேசி அழைப்பால் அவனது அப்பா லாரன்ஸை மருத்துவமனையில் சேர்க்க
உதவி செய்கிறான். அப்படி அவன் செல்லும் போது நர்ஸ் இவாஞ்சலினைப் பார்க்கிறான். இவாஞ்சலின்
மேல் காதல் உண்டாகிறது ரூபனுக்கு.
தனது
இருபத்து ஒன்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தனது நண்பன் யோசேப்பின் வீட்டில் குடியும்
கும்மாளமுமாகக் கொண்டாடும் நேரத்தில் போலீஸ் வந்து அவனையும் அவனது நண்பர்களையும்
அள்ளிப் போட்டுக் கொண்டு செல்கிறது.
அப்போதுதான்
நண்பன் செளமியன் குறித்த மரணச் செய்தி அலைபேசி மூலம் ரூபனுக்கு வருகிறது.
இந்த
இடைப்பட்டக் காலத்தில் செளமியன் தவறான பாலுறவு, குடி, போதைப் பழக்கம் என தீவிரமாகி
இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து இறந்து போகிறான். நண்பன் செளமியனின் மரணம் ரூபனை நிலைகுழையச்
செய்கிறது.
நிலைமை
இப்படி இருக்க...
மருத்துவமனையில்
இருக்கும் லாரன்ஸ்க்கு சாப்பாடு எடுத்துச் செல்லும் செளமியனின் மாமா பூபாலன் ஆமோஸால்
தாக்கப்பட, ரூபனுக்குள் ஒரு கணக்கு ஓடுகிறது. இந்த நேரத்தில் மருத்துவமனையில் இருக்கும்
செளமியனின் அப்பா லாரன்ஸ்க்கு சாப்பாடு எடுத்துச் சென்றால் பூபாலனுக்கு உதவிய மாதிரியும்
இருக்கும், இவாஞ்சலினைப் பார்த்தது மாதிரியும் இருக்கும், நண்பன் செளமியனுக்கு நன்றிக்கடன்
செலுத்துவது போலும் இருக்கும் என்று.
தினம்
லாரன்ஸ்க்கு சாப்பாடு எடுத்துச் செல்கிறான் ரூபன். இவாஞ்சலினோடு காதல் கனிகிறது.
முப்பத்து
எட்டு லட்சம் செலவு செய்தும் லாரன்ஸ் இறந்து போகிறார். ஒரு மாபெரும் கேரம் பிளேயரான
லாரன்ஸின் இறுதிச் சடங்கு மிகுந்த மரியாதையோடு கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் முடிகிறது.
நண்பனின்
மரணம், அதற்கடுத்த நண்பனின் அப்பாவின் மரணம் இரண்டும் சேர்ந்து ரூபனை நிலைகுழையச் செய்கிறது.
நண்பனாக இருந்தும் செளமியனை நல்வழிப்படுத்தி அவனது மரணத்தைத் தடுக்க முடியாமை ஒரு குற்ற
உணர்ச்சியாக மாறி அவனை உறுத்துகிறது. அதே போலே நண்பனின் அப்பா எனத் தெரிந்தும் தனது
காதலை முதன்மைபடுத்தி இவாஞ்சலினைப் பார்க்கச் செல்வதற்காகவே சாப்பாடு எடுத்துச் சென்றதும்
அவன் மனதை உறுத்துகிறது.
ரூபனின்
மனநிலைப் பிறழ அரும்பிக்கிறது. ரூபனின் அம்மா ரெஜினா இடிமுழக்கம் எபினேசர் பாஸ்டரிடம்
அழைத்துச் செல்கிறார். அவர் ஜெபிக்கிறார். ரூபனின் நிலை மேலும் மோசமாகிறது.
ரூபனோடு
பணியாற்றும் நண்பர்களின் அறிவுறுத்தலின் படி செங்கல்பட்டுச் சாமியாரிடமும் ரூபன் அழைத்துச்
செல்லப்படுகிறான்.
ரூபனே
சொன்னதன் படி கோவளம் தர்க்காவுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு மந்திரித்த தாயத்து
கட்டப்படுகிறான்.
எதிலும்
நிலைமை சரியாகாமால் கடைசியில் இரும்புலியூர் ஹோமில் சேர்க்கப்படுகிறான்.
எதிலும்
குணமாகாமல் ரூபனின் நிலை நாளுக்கு நாள் மோசமாக ரெஜினா தூத்துக்குடியிலிருந்து ஒரு
பாஸ்டர் மூலம் ஜெபித்து குணமாக்க முடியும் என்று நம்பி அதற்கான முயற்சிகளை இடிமுழக்கம்
எபினேசர் மூலம் மேற்கொள்கிறாள். இது பிடிக்காத ரூபனின் அப்பா ரூபன் ஹோமில்தான் இருக்க
வேண்டும், அதிலிருந்து வெளியே வந்து விடக் கூடாது என்பதற்காக நீண்டநாளுக்குப் பின்
குடித்து விட்டு அங்கு குடிக்குத் துணை வரும் ஆமோஸையும் அழைத்துக் கொண்டு எபினேசரின்
சுவிசேஷ வீடு முன் பிரச்சனை பண்ணுகிறார். எபினேசர் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுக்க
குணசீலனை அள்ளிப் போட்டுக் கொண்டு செல்கிறது போலீஸ்.
தனது
கணவனையே கைது செய்து விட்டார்களே என்ற கோபத்தில் ரெஜினா எபினேசர் பாஸ்டரின் பாலியல்
சீண்டல்களைச் சொல்ல எபினேசர் அரெஸ்ட் ஆகிறார்.
இரும்புலியூர் ஹோமில் சேர்க்கப்பட்டிருந்த ரூபன்
குணமாகிறான். தன் காதலி இவாஞ்சலின் மற்றும் சந்திப்போரிடம் தன் மனப்பிறழ்வைச் சாமர்த்தியமாக
தான் ஒரு நாவல் எழுதுவதற்காகவே அவ்வாறு நடந்து கொண்டதாகச் சொல்கிறான்.
அரெஸ்ட்
ஆகி விடுதலை ஆகும் எபினேசர் தொடர்ந்து பேட்டையில் இருக்கப் பிடிக்காமல் மதுரைக்குச்
செல்கிறார். சுவிசேச வீட்டை ரூபனின் நண்பன் பாலு விலைக்கு வாங்கி அங்கு இரண்டடுக்கு
மாடி வீடு கட்டுகிறான். வீட்டின் தரைத்தளம் இரவு பாடச் சாலையாகிறது. முதல் தளம் கேரம்
அரங்கமாகிறது. இரண்டாவது தளம் அவனது சொந்த உபயோகத்துக்கு ஆகிறது.
ரூபனுக்கும்
இவாஞ்சலினுக்கும் திருமணம் நடக்கிறது. இவாஞ்சலின் மாசமாய் இருக்கிறாள். அருகில் ரூபனை
வளர்த்தெடுத்த ஆயா நகோமியம்மா இருக்கிறாள். இவாஞ்சலின் தன் மாமியார் ரெஜினாவைப் பற்றிக்
கேட்கிறாள். நகோமியம்மா ராகம் போட்டு கதையைச் சொல்ல தயாராகிறாள். இந்த இடத்தில்
நாவல் நிறைவு பெறுகிறது.
இப்படி
நாவலைச் சுருக்கமாக நான் ஒரு முன்கதையாகச் சொன்னாலும் இன்னும் நிறைய கிளைக்கதைகள்
நாவலில் இருக்கின்றன. அதையெல்லாம் விவரித்துச் சொன்னால் நாவலின் முன்கதைச் சுருக்கமே
ஒரு குறுநாவலாக மாறி விடலாம். எனினும் ஒரு சில கிளைக்கதைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.
அது கீழே அடுத்தப் பதிவில்...
No comments:
Post a Comment