9 Jan 2019

நெஞ்சுரம் எனும் விதை

நெஞ்சுரம் எனும் விதை
கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் நிறைய மரங்களைக் காவு வாங்கியது. எவ்வளவோ காலத்தைத் தாங்கி நின்ற மரங்கள், சில மணி நேர கஜா புயலில் வீழ்ந்தன.
விழுந்த மரங்களில் தென்னை மரங்கள் அதிகம், அநேகம்.
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு, தென்னையைப் பெத்தா இளநீரு என்பாரே கண்ணதாசன். அவரே இன்றிருந்தால் தென்னையை வளர்த்தா கண்ணீரு என்று பாடியிருப்பார்.
அப்படி கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு வீழ்ந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்துவது கூட சிரமமான நிலையில்...
எந்தக் கொல்லையில் செழித்து வளர்ந்தனவோ அதே கொல்லையில் வெட்டிப் புதைத்துக் கொண்டு இருக்கிறார்கள் டெல்டா பகுதி மக்கள்.
புதைத்த அதே கொல்லையில் தென்னையொன்று முளை விடும் நாளையும் உருவாக்குவார்கள் எம் மக்கள். அவர்கள்தானே எம் விவசாயிகள்.
புயல் மரங்களை அழிக்கலாம். விதைகளை என்ன செய்து விட முடியும்? விவசாயிகளின் நெஞ்சுரத்தை விதை என்று சொல்வதை விட வேறு எப்படிச் சொல்ல முடியும்?
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...