9 Jan 2019

நாலடியாரில் ஒரு சினிமா வசனம்


நாலடியாரில் ஒரு சினிமா வசனம்
எப்படிப் பார்த்தாலும் எல்லாவற்றிலும் ஒரு நன்மை இருக்கிறது. எந்த நன்மையிலும் ஒரு தீமை இருக்கிறது. இரண்டும் கலந்ததாகவே எல்லாமும் இருக்கிறது.
அடைவில் ஓர் இழப்பும், இழப்பில் ஓர் அடைவும் இருக்கவே செய்கிறது.
எதையும் தடுக்க முடிவதில்லை. எதையும் நிறுத்த முடிவதில்லை. இயன்றதை மட்டும் செய்ய முடிகிறது.
பலம் பலவீனமாகிறது. பலவீனம் பலமாகிறது.
காலரைத் தூக்கி விட்டு நடப்பவரும் காலில் விழ நேர்கிறது. காலில் விழ நேர்ந்தவரும் காலரைத் தூக்கி விட்டு நடக்கும் காலம் வருகிறது.
வாழ்க்கை ஒரு சக்கரம்.
கீழே இருப்பது மேலே போகிறது.
மேலே இருப்பது கீழே வருகிறது.
நாலடியார் சகடக்கால் போல வரும் என்கிறது இதை.
நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள் என்பது புரிகிறது, சரிதான்...
'வாழ்க்கை ஒரு வட்டம்டா' என்று சினிமா இதை தனக்கான வசனமாக்கிக் கொண்டது.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...