அலைபாயாமல் இருக்க ஓர் அற்புத வழி
அலைபாயுதே
கண்ணா பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏன் மனம் அலை பாய்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா?
மனதுக்கு
எப்போதும் ஒரு சமாதானம் தேவைப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை Justification என்று சொல்லலாம்.
அந்த சமாதானம்
கிடைக்காவிட்டால் மனம் அலைபாயத்தான் செய்கிறது.
அந்த சமாதானத்தை
அவரவர் பிஸ்கொத்துகளுக்கு ஏற்ப இசையில், நடனத்தில், ஆன்மீகத்தில், வாசிப்பில், குடியில்,
போதையில் என்று தேடிக் கொண்டு இருக்கின்றனர்.
இந்தச் சமாதானமே
தேவையில்லை என்று உணர்வதற்கு கொஞ்சம் நாட்கள் பிடிக்கும். மனதைப் பார்த்து நீ பாட்டுக்கு
உன் வேலையைப் பார்த்துக் கொண்டு கிட, நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக் கொண்டு
போகிறேன் என்று சொல்லும் நிலை அது.
அப்படி ஒரு
நிலை வாய்த்து விட்டால் அவர் ஞானி என்று அழைக்கப்படுபவர் ஆகிறார். அவரை அதற்குப் பின்
நீங்கள் சாணி என்று அழைத்தாலும் கவலைப்பட மாட்டார்.
அவர் நிறைய
தத்துவங்களைப் பேசுவார். அவைகள் எதுவும் புரியாது. அதற்குக் காரணம் அவைகள் எல்லாம்
புரிந்து கொள்வதற்கு அல்ல என்பதுதான். அந்தப் புரிந்து கொள்ளலை விட்டு விடுங்கள்
என்பதுதான் அதிலிருந்து அவர் சொல்ல வரும் மேட்டர். அதை இந்த மனிதச் சமூகம் கடைசிவரை
புரிந்து கொள்ளாமல் அவரிடம் அலைமோதிக் கொண்டே இருக்கும்.
அப்புறம்
என்ன?
மறுபடியும்
அலைபாயுதே சாங்தான்.
*****
No comments:
Post a Comment