21 Jan 2019

ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சி முடிவு


ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சி முடிவு
இந்த மனிதச் சமூகத்தை ரொம்ப டீப்பாக ஆராய்ந்ததிலிருந்து நான் சில முடிவுகளுக்கு வந்திருக்கிறேன்.
உங்களுக்கு இதில் உடன்பாடா என்பதை நீங்கள் அவசியம் சொல்ல வேண்டும் என்று பிரயாசைப்படுகிறேன். ஆனால் அதை என்னால் வலியுறுத்த முடியாது. வற்புறுத்த முடியாது. காரணம் மேட்டரே அதுதான்.
அது என்னவென்றால்,
யாரையும் வலியுறுத்த முடிவதில்லை. வற்புறுத்துவது நோ சான்ஸ். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே இருக்க விரும்புகிறார்கள்.
உணர்வுரீதியான சிக்கல்தான் கட்டமைப்பை மாற்றச் சொல்கிறது. இல்லையென்றால் யாரை மாற்ற வேண்டும் என்று நீங்களோ நானோ விரும்பப் போகிறோம். அப்படி ஓர் அவசியம் இல்லையென்றால் யாரும் மாற வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
எவ்வளவுதான் மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும் இறுதியில் தேவைபடுவது எல்லாம் நாம் மாற வேண்டுமே தவிர அடுத்தவர்களை அநாவசியமாக மாற்ற முயற்சிக்கக் கூடாது என்ற அண்டா நசுங்கிய அனுபவம்தான். அதற்கு ஆரம்பத்திலேயே யாரையும் மாற்ற முயலக்கூடாது என்று நம்மை நாமே மாற்றியிருக்கலாம் என்று தோன்றுகிறதா?
அதுதான் விசயம்.
மற்றபடி நீங்கள்தான் சொல்ல வேண்டும். என்னால் எதையும் வற்புறுத்தவோ, வலியுறுத்தவோ முடியாது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...