16 Jan 2019

இட ஒதுக்கீட்டுப் பார்வைகள்


இட ஒதுக்கீட்டுப் பார்வைகள்
சான்றிதழ் பெறுவதில் நடைபெறும் முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள் நாட்டில் உள்ளவர்கள் அறியாதது அல்ல.
இன்னும் சாதிச் சான்றிதழ்களைப் பெற முடியாமல், கிடைக்கப் பெறாமல், விண்ணப்பித்தும் வாங்க முடியாமல் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறாதவர்களைப் பத்திரிகைகள் சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாக பழங்குடியின மக்கள் மற்றும் நாடோடிகளாகத் திரிபவர்கள் இவ்விசயத்தில் உரிய சான்றிதழ்களைப் பெற முடியாமல் அதிகமாகவே பாதிக்கப்படுகிறார்கள்.
இடஒதுக்கீடு என்பது சாதி ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக அநீதிக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சமூக சமத்துவத்தை நோக்கிய ஒரு முயற்சியாகும்.
பொருளாதார ரீதியான பின்னடைவால் எதிர்கொள்ளும் அவமானங்களை விட சாதி ரீதியிலான பின்னடைவால் எதிர்கொள்ளும் அவமானங்களும், மனித உரிமை மீறல்களும் அதி உக்கிரமானவை. அதைக் கருத்தில் கொண்டே இடஒதுக்கீடு என்பது கொண்டு வரப்பட்டது.
இன்றும் சாதி ரீதியிலான பார்வைகள் மாறி விடவில்லை.
பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டில் மீண்டும் ஒரு பின்னடைவையே உண்டாக்கலாம்.
ஏற்கனவே சான்றிதழ் பெறுவதில் நிலவும் இடர்பாடுகள், முறைகேடுகள் நிறையவே உள்ள நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்கான சான்றிதழைப் பெறுவதில் நிறையவே சிக்கல்கள் நிலவக்கூடும். இது வெறும் சான்றிதழ் பெறுவதில் உள்ள பிரச்சனை மட்டுமே அல்லாமல் மேலும் பல உட்பிரிவினைகளை இம்முறை ஏற்படுத்தக் கூடும்.
இதற்காக நமது நிர்வாகம் மற்றும் அமைப்புகள் முன்னெடுக்க வேண்டியது பொருளாதாரத் தேக்கங்களைக் கண்டறிந்து அவைகளை நீக்குவதும், ஓரிடத்தில் பொருளாதாரம் குவிந்து விடாமல் பரவலாகச் சென்று சேரும் வகையிலான வேலை வாய்ப்புக்கான முறைமைகளை உருவாக்குவதும்தான்.
இடஒதுக்கீடு என்ற கருத்தாக்கத்தில் ‍மேலும் மேலும் குறுக்கிச் சிந்திக்காமல் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள், அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்புகள், அனைவருக்கும் சமமான பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் போன்றவைகளைத் தொலைநோக்காகக் கொண்டு முயற்சிகள் எடுக்க வேண்டியது நாம் சார்ந்துள்ள மக்களாட்சி அமைப்புகள் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...