23 Jan 2019

மஜா பண்ண உங்களுக்கு ஒரு வாய்ப்பு


மஜா பண்ண உங்களுக்கு ஒரு வாய்ப்பு
மனித குலத்தின் அதிர்ச்சிகரமான உண்மைகளைக் கண்டறிந்து இருப்பதாக மலை முகட்டின் உச்சியிலிருந்து பேசத் தொடங்கினார் குரங்காட்டிப் பித்தர்.
பித்தர் ஆவது என்பது எளிதன்று. அதற்குப் பல விதமாக உளறிப் பழகியிருக்க வேண்டும். தொடர்பற்ற முறையில் முற்றிலும் தொடர்பறுந்த நிலையில் பேசிப் பழகியிருக்க வேண்டும். கொஞ்சம் சித்தம் பிசகியிருக்கவும் வேண்டும். அதற்கெல்லாம் எல்லாரும் அனுமதிக்க மாட்டோம் என்பதிலிருந்தே பித்தர் ஆவது எளிதில்லை என்பதை நிரூபித்து விட முடியும்.
ஆம்! அது அவ்வளவு எளிதன்று. நைந்துப் போன கயிற்றில் நானூறு முடிச்சுகளைப் போடுவதைப் போன்றது.
இரத்தசோகை வந்தவர் உடலிலிருந்து வெட்டுப்பட்டு வெளியேறும் ரத்தம் போல அவர் தொடங்கி வார்த்தைகளாக ஒழுக ஆரம்பித்தார்,
"கடைசியில் அவர்கள் செய்கின்ற தவறுகளையெல்லாம் செய்து விட்டு, அவர்கள் செய்த தவறுகளுக்கு உங்களை மன்னிப்பு கேட்குமாறு சூழ்நிலையை உருவாக்குவார்கள்.
மன்னிப்பு கேட்டது, கேட்பது உங்களுக்குப் பழக்கமாகியிருக்கலாம்.
ஏன் கூடுதலாக அந்த அக்கறையை எடுத்துக் கொள்ள வேண்டும்?
யாரும் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்.
அதனால் அவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்றாலும் உங்களுக்குப் புகழ் கிடைக்கும் என்பதாலேயே விரும்ப மாட்டார்கள்.
இதனால் சில நேரங்களில் நிஜமாகவே வெறுத்துப் போவீர்கள்.
வேலை செய்பவர்களே வேலை வாங்கப்படுவார்கள்.
ஒருவர் உழைக்க அதை மற்றவர்கள் வேடிக்கைப் பார்ப்பார்கள்.
வேடிக்கைப் பார்ப்பவர்கள் அச்சாரம் வாங்காத பார்வையாளர்கள் அல்லர்தான். அவர்களும் அச்சாரம் வாங்குபவர்களே.
ஆக அச்சாரம் வாங்குபவர்கள் வேலை பார்த்து அச்சாரம் வாங்குபவர்கள், மற்றவர்கள் வேலைப் பார்ப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அச்சாரம் வாங்குபவர்கள் என்று இருவகைப்படுத்தப்படுகிறார்கள்.
மூன்றாவதும் இதில் ஒரு வகை உண்டு. அவர்கள் யாரெனில் வேலை பார்ப்பவர்களைப் பிழைக்கத் தெரியாதவர்கள், உலகம் அறியாதவர்கள் என்று கிண்டல் செய்து கொண்டு அச்சாரம் வாங்குபவர்கள்.
உலகில் இப்படித்தான் அச்சாரம் பிசகில்லாமல் அச்சில் சுழன்று கொண்டிருக்கிறது.
இப்படித்தான் அச்சாரம் பட்டுவாடா செய்யப்பட்டு கொண்டிருக்கிறது உழைப்பவர்களுக்கும், உழைக்காதவர்களுக்கும்.
பேசிப் பித்தராகி நிறைய அச்சாரம் செய்பவர்கள் உண்டு.
எமக்கு அது கைகூட வில்லை.
படிக்கும் வயதிலேயே கணக்கு வராமல் படிப்பை முடித்துக் கொண்டவர் என்பதால் அச்சாரம் போது கிடைக்கும் பணத்தை எப்படி எனக்கு எண்ண தெரியும் என்று குழப்பத்திலேயே அச்சாரம் செய்து சம்பாதிப்பது கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டவர் அன்றோ யாம்.
பணத்தை எண்ணத் தெரியாமையால் பணம் வேண்டாம் என்பது பொருளா? ஆசிரமமாக அமைத்துக் கொடுக்கக் கூடாது என்று அர்த்தமா? தங்கக்கட்டிகளாக வழங்கியோ அச்சாரம் செய்தால் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று பொருளா?"
குரங்காட்டிப் பித்தரின் பேச்சுப் பிடித்திருந்தால் பதிவிடுங்கள். அவரும் பதிவிடுவார். மஜா பண்ணலாம்!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...