24 Jan 2019

ஆதி காலத்து மிருகம் ஒன்று


நீர்த் துளிகள் போல் ஒட்டிக் கொள்ளும்
சாத்தியம் கூடாத பொழுதுகளில்
பிரிவின் மீளாத் துயரில்
கொதிப்பில் தெறித்து விழுந்து
தற்கொலை புரிந்து கொள்ளும்
எண்ணெய் துளிகளென ஆகிறேன்
உடைந்த கண்ணாடித் துண்டுகளில் தெரியும்
அத்தனை பிம்பங்களையும் ஒருங்கிணைக்கும்
அதிசயம் கூடாத என் கையாலாகத்தனத்துக்காக
அன்பைப் பராமரிக்கத் தெரியாதவன் என்று
என்னை கை காட்டாதீர்கள்
விட்டுக் கொடுத்தலின் பேரன்பில்
தனிமையைத் தின்று வாழும்
அழிக்கப்பட்ட ஆதி காலத்து மிருகம் நான்
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...