பைபிளும் நாலடியாரும்
பாவத்தின்
சம்பளம் மரணம் என்கிறது பைபிள்.
சட்டத்துக்குப்
பயப்படாத சமூக விரோதிகள் கூட சாவுக்குப் பயம் கொள்கிறார்கள்.
இதையே கத்தி
எடுத்தவருக்குக் கத்தியால் சாவு, துப்பாக்கி எடுத்தவருக்கு துப்பாக்கியால் சாவு என்கிறது
கிராமத்து மொழி.
வன்முறை பாவத்தின்
பாதையைத் தேர்வு செய்கிறது. பாவத்தின் பாதை மரணத்தில் கொண்டு பொய் நிறுத்துகிறது.
இப்படியெல்லாம்
யோசித்துக் கொண்டே நீங்கள் நாலடியாரைப் படித்தால் அசந்து போவீர்கள்,
'கூற்றம்
குதித்து உய்ந்தார் ஈங்கில்லை' என்கிறது நாலடியார்.
பாவத்தின்
சம்பளம் மரணம் என்று பைபிள் சொல்வதிலும்,
'கூற்றம்
குதித்து உய்ந்தார் ஈங்கில்லை' என்று அச்சுறுத்தி ஆகவே அறம் செய்க! அறத்தை மட்டுமே
செய்க! என்று நாலடியார் சொல்வதிலும் ஒரே குரலே ஒலிப்பதாகக் கருதுகிறேன்.
*****
No comments:
Post a Comment