5 Jan 2019

தமிழ் சஞ்சிகையில் இரு கவிதைகள்

நேற்று 04.01.2019 தமிழ் சஞ்சிகை இணைய இதழில் வெளியான இரு கவிதைகள். அதன் இணைப்பை (லிங்க்) கவிதைகளுக்குக் கீழே கொடுத்துள்ளேன். 
கடவுளின் முடிவு

கடைசி முன்பதிவு மறுக்கப்பட்ட
கடவுளுக்குத் தட்கலுக்கான
வாய்ப்பு வழங்கப்பட்டது
முக்காலமும் அறிந்த அவர்
அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல்
தோற்றுப் போனார்
முன்பதிவு இல்லாமல்
செல்லத் தீர்மானித்தக் கடவுள்
சிறுநீர்க் கழிக்கக் காத்திருந்தார்
மலம் கழிக்க வரிசையில் நின்றார்
கும்மாளத்துக்குக் குறைவு இல்லாத
பொதுப் பெட்டியில்
குத்துப் பாட்டுக்கு நடனமிட்டார்
பெட்டிக்கு நால்வரைச் சுமக்கும்
குளிர்பதனப் பெட்டிக்கும்
பெட்டிக்கு நானூறைச் சுமக்கும்
பொதுப் பெட்டிக்கும் இருந்த
வேறுபாட்டைப் பார்த்த கடவுள்
சுவிஸ் பேங்கில் ஒரு கள்ளக் கணக்குத்
துவங்குவது என தீர்மானமாக முடிவெடுத்தார்
*****
வசப்படாமல் போன வானம்
கைகளுக்கு ருகிலிருந்து வானத்தைப் பிடித்து
விளையாடினார்கள் குழந்தைகள்
விண்மீன்களைப் பூக்களாய்ப்
பறித்து வீசி எறிந்தார்கள்
நிலாவைப் பந்தடித்தார்கள்
சூரியச் சுடர் கொளுத்தி
மத்தாப்பாய் மகிழ்ந்தார்கள்
அவர்கள் முதல் பொய் சொன்ன போது
வானம் தலைக்கு மேல் போனது
முதல் கோள் மூட்டல் நிகழ்ந்த போது
பனை மர உயரத்துக்குப் போனது
மனிதர்களாய் வளர்ந்து முதல் முறையாகத்
திட்டிக் கொண்ட போது
மலையளவு உயரத்துக்குப் போனது
முதல் முறையாக ரத்தம் வடியும் அளவுக்கு
அடித்துக் கொண்ட போது
பயந்து போய் பல மைல் தூரம் ஓடிப் போனது
அப்புறம் அரிவாள், வேல்கம்பு, துப்பாக்கி, அணுகுண்டு
என ஆன பிறகு
எட்டாத உயரத்துக்குப் போய்க் கொண்டே இருக்கிறது வானம்
*****
இணைப்புகள் 

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...