7 Jan 2019

லாவோட்ஸூ இவ்வாறு சொல்கிறார்


லாவோட்ஸூ இவ்வாறு சொல்கிறார்
லாவோட்ஸூவின் ஞானமும் நல்வாழ்க்கையும் என்ற நூல் வாசித்தவர்களுக்கு,
'திருப்தியுடையவருக்கு தலைகுனிவு இல்லை'
"திருப்தியின்மையே மாபெரும் துயரம்' என்ற வரிகள் நிச்சயம் பரிச்சயம் ஆகியிருக்கும்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இங்கிலாந்தை வழிநடத்தியதில் சர்ச்சிலுக்கு முக்கியமானப் பங்கு உண்டு.
அவர் காலையில் எழும் போது இன்று செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்று எழுவாராம்.
இரவில் உறங்கச் செல்லும் போது இயன்றதை ஆற்றி விட்டாகி விட்டது என்ற நினைவுடன் திருப்தியாக உறங்கச் செல்வாராம்.
சர்ச்சில் மிக அற்புதமாகவே இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்தை வழிநடத்தினார்.
இரண்டாம் உலகப் போர் என்ற மாபெரும் நெருக்கடியில் வழிநடத்த தெரிந்த சர்ச்சில் போருக்குப் பின்பு எப்படியெல்லாம் சிறப்பாக இங்கிலாந்தை வழிநடத்தியிருக்க முடியும்? ஆனால் வரலாற்றில் நடந்தது வினோதம்.
இங்கிலாந்து மக்கள் போருக்குப் பின் அவருக்கு டாட்டா காட்டி அனுப்பி விட்டார்கள். சர்ச்சில் அப்போது அதை எப்படி உணர்ந்திருப்பார் என்று யோசித்து இருக்கிறேன்.
ஆனால் அவர் எப்படி யோசித்திருக்கலாம் என்று யோசித்த போது எனக்கு லாவோட்ஸூன் 'திருப்தியுடையவருக்கு தலைகுனிவு இல்லை' என்ற வரிகள்தான் ஞாபகம் வந்தது.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...